அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்


சிலப்பதிகாரம் உணர்த்தும் நீதி, நேர்மை மற்றும் ஆட்சியாளர்களின் அறப்பொறுப்பு.

 

சிலப்பதிகாரம் என்பது தமிழ் இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையான ஒன்றாகும். இதனை இயற்றியவர் சேர மரபைச் சேர்ந்த துறவியான இளங்கோவடிகள் ஆவார். இது கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழ்க் கூறுகளையும் ஒருங்கே கொண்டிருப்பதால் இது ‘முத்தமிழ்க் காப்பியம்’ என்றும், சாதி, சமய வேறுபாடின்றி சாதாரண மக்களை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டு அமைக்கப்பட்டதால் ‘குடிமக்கள் காப்பியம்’ என்றும் இது போற்றப்படுகிறது.

காவிரிப்பூம்பட்டினம் நகரில் வாழ்ந்த பெருவணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன், மாநாய்கனின் மகள் கண்ணகி ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கிறது. சில காலம் இருவரும் இன்புற்று வாழ்கின்றனர். பின்னர், ஆடலரசி மாதவியின் நாட்டியத்தைக் கண்டு அவள் மீது மயங்கும் கோவலன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் வாழத் தொடங்குகிறான். தன் செல்வங்கள் முழுவதையும் இழக்கிறான். 

கானல் வரிப் பாடலின் போது ஏற்பட்ட தவறான புரிதலால் மாதவியை விட்டுப் பிரியும் கோவலன், மீண்டும் தன் தவறை உணர்ந்து கண்ணகியிடம் வருகிறான். கண்ணகி எவ்விதக் கோபமும் இன்றித் தன் கணவனை ஏற்றுக் கொள்கிறாள். இழந்த செல்வத்தை மீண்டும் ஈட்ட, இருவரும் வணிகம் செய்ய மதுரைக்குச் செல்கின்றனர். 

வணிகத்திற்காகக் கண்ணகியின் காற்சிலம்புகளில் ஒன்றை விற்கச் செல்லும் கோவலன் மீது, பாண்டிமாதேவியின் சிலம்பைத் திருடிய பொற்கொல்லன் பழி சுமத்துகிறான். உண்மை அறியாத பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், ஆராயாமல் கோவலனைக் கொல்வதற்கு ஆணையிடுகிறான். 

கணவன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அலறித் துடிக்கும் கண்ணகி, பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று நீதி கேட்கிறாள். தன் சிலம்பு மாணிக்கப் பரல்களையும், பாண்டிமாதேவியின் சிலம்பு முத்துப்பரல்களையும் கொண்டது என்பதை மெய்ப்பித்து, தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை உணர்த்துகிறாள். தன் அநீதியான தீர்ப்பால் அறம் பிறழ்ந்ததை உணர்ந்த பாண்டிய மன்னன் “யானோ அரசன்? யானே கள்வன்” என்று கூறி, அரியணையிலேயே உயிர் துறக்கிறான்; அவரைத் தொடர்ந்து அரசியும் உயிர்விடுகிறாள். ஆற்றொணாத் துயரமும் கோபமும் கொண்ட கண்ணகி, மதுரை நகரத்தை எரியூட்டுகிறாள். பின்னர் சேர நாட்டுக்குச் சென்று தெய்வமாக மாறுகிறாள். 

இளங்கோவடிகள் இக்காவியத்தின் நூற்பயனாக கீழ்க்கண்ட மூன்று முதன்மையான வாழ்வியல் உண்மைகளை முன்வைக்கிறார்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்!

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவதியும்!

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்!”

 

  1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் (Justice & Governance)

அரசனாக இருந்தாலும், நடுநிலை தவறாமல் ஆராய்ந்து நீதி வழங்க வேண்டும். தவறு செய்யும் ஆட்சியாளர்களைச் சட்டமும் அறமும் தண்டிக்கும். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் அவசரப்பட்டுத் தவறான தீர்ப்பு வழங்கியதால், தன் உயிரையும் புகழையும் இழக்க நேரிட்டது. இது அதிகாரத்தில் உள்ளவர்கள் எப்போதும் அறவழியில் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

  1. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் (Virtue of Chastity & Integrity)

தன் கணவன் மீதான தூய்மையான அன்பும், கற்பொழுக்கமும், நேர்மையும் கொண்ட பெண்களை உலகம் என்றும் போற்றும். சாமானியப் பெண்ணான கண்ணகி, தன் உண்மையான கற்பின் ஆற்றலாலும் நீதிக்கான போராட்டத்தாலும் பேரரசனை எதிர்த்து நின்றாள்; முடிவில் தெய்வ நிலையை எய்தினாள். 

  1. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் (The Law of Karma)

ஒருவர் செய்யும் நல்வினை, தீவினைகள் (செயல்கள்) காலப்போக்கில் அதன் பயனை நிச்சயமாகக் கொடுக்கும். கோவலன் தன் மனைவியைப் பிரிந்து, செல்வத்தை வீணடித்துச் செய்த தவறுகளும், அவனது முற்பிறவி வினைகளுமே அவனது துயரமான முடிவிற்குக் காரணமாயின. 

இவையில்லாமல் மேலும், அக்காலத்தில் பெண்களை வெறும் எளிய பாத்திரமாகப் பார்க்காமல், நீதிக்காகக் குரல் கொடுக்கும் வீரம் நிறைந்த ஆளுமையாகக் கண்ணகியை இளங்கோவடிகள் படைத்துள்ளார். இளங்கோவடிகள் சமணத் துறவியாக இருந்தாலும், இதில் சைவ, வைணவ, பௌத்த கருத்துகளையும் இயற்கை வழிபாட்டையும் சமமாகப் போற்றியுள்ளார்.

சிலப்பதிகாரம் என்பது வெறும் சோகக் கதை மட்டுமல்ல; அது நீதி, நேர்மை, அறநெறி மற்றும் விதியின் வலிமையை மனிதகுலத்திற்கு உணர்த்தும் காலத்தால் அழியாத ஒரு மகத்தான காவியமாகும்.

– Mr. J. Karthik
Associate professor, Language Department

 

Digital Marketing

previous post next post
Hcas-Whatsapp-Hi
Have Questions?

Reach out to Us

Chatbot
Need help? Just ask Hira!
Need help? Just ask Hira!
HCAS HIRA

Enquiry Form

Job Details

Name of the Position

Assistant Professor

Name of the Position :

Campus :

Division :

Experience :

Job Description :

Job Reference No. :

Assistant Professor

Padur

Dept. of Mathematics

03

03

03

Functional Area

Desired Qualification

Essential Qualification

Required Skills

Salary Details